ADDED : ஜூலை 11, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க, தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் நடவடிக்கை எடுத்துள்ளார். தங்கவயலை சேர்ந்த இருவரை, அந்த நகரை விட்டு வெளியேற்றியுள்ளார்.
ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ள ஆண்டர்சன் பேட்டை லுார்து நகரை சேர்ந்தவர் பம்மா என்ற பரமசிவா, 21, மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதுபோல, ரவுடி சிவா, 34, மீது கொலை முயற்சி வழக்குகள் உட்பட 16 குற்ற வழக்குகள் உள்ளன. இருவரையும் சித்ரதுர்கா மாவட்ட எல்லைக்குள் இருக்க, எஸ்.பி., உத்தரவு பிறப்பித்துள்ளதால், இருவரும் தங்கவயலை விட்டு வெளியேறினர்.
