/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆவணங்களின்றி பெங்களூரில் பணியாற்றலாம் உறவினர்களுக்கு வங்கதேசத்தினர் அழைப்பு
/
ஆவணங்களின்றி பெங்களூரில் பணியாற்றலாம் உறவினர்களுக்கு வங்கதேசத்தினர் அழைப்பு
ஆவணங்களின்றி பெங்களூரில் பணியாற்றலாம் உறவினர்களுக்கு வங்கதேசத்தினர் அழைப்பு
ஆவணங்களின்றி பெங்களூரில் பணியாற்றலாம் உறவினர்களுக்கு வங்கதேசத்தினர் அழைப்பு
ADDED : டிச 28, 2025 05:04 AM

பெங்களூரு: பெங்களூரில் ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ ஓட்டுவதாக, வங்கதேசத்தை சேர்ந்த மூன்று பேர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோர், கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல், அதிகளவில் வசித்து வருகின்றனர் என்று, பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் மூன்று பேர், ஆட்டோ ஓட்டுநர்கள் உடை அணிந்து உள்ளனர். அவர்களில் ஒருவர், 'வங்கதேசத்தை சேர்ந்த நாங்கள், எந்தவித ஆவணங்களும் இல்லாமல், பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறோம். பெங்களூரில் செக்யூரிட்டியாக பணியாற்ற, மாதம் தோறும் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இதுவே, ஆட்டோ ஓட்டினால் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
எனவே, நம் மக்கள் எல்லாம் பெங்களூருக்கு வாருங்கள்' என, தங்கள் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சிலர், 'எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல், எப்படி ஆட்டோக்கள் ஓட்டுகின்றனர்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள், பெங்களூரில் ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓட்ட சட்டத்தில் இடம் உள்ளதா. இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில், ஒரு சூடான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குடியேற்றம், வேலை வாய்ப்பு, ஆவணம் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக கேள்வி எழுந்து உள்ளது.

