/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணமான 11 மாதத்தில் வங்கி ஊழியர் தற்கொலை
/
திருமணமான 11 மாதத்தில் வங்கி ஊழியர் தற்கொலை
ADDED : நவ 11, 2025 04:28 AM

கிரிநகர்: திருமணமான 11 மாதங்களில் வங்கி ஊழியர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, கிரிநகரை சேர்ந்தவர் ககன் ராவ், 31. தனியார் வங்கி ஊழியர். கடந்த ஜனவரியில் ககனுக்கும், சாம்ராஜ்நகரின் மேகனா, 28, என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த ககன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த ககனின் தந்தை லட்சுமண், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், 'மேகனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை தட்டிக் கேட்டார். ககனை, மேகனாவும், அவரது குடும்பத்தினரும் தாக்க முயன்றனர். மனரீதியாக தினமும் ககனுக்கு, மேகனா தொல்லை கொடுத்தார். என் மகன் தற்கொலைக்கு அவரது மனைவி தான் காரணம்' என, குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை, மேகனா மறுத்துள்ளார். 'ககனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது, திருமணம் முடிந்த இரண்டு நாட்களிலேயே தெரிய வந்தது. அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடும்படி, பல முறை கூறினேன். அவரோ கேட்கவில்லை. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், அவர் தற்கொலை செய்து இருக்கலாம்' என்று கூறி உள்ளார்.

