/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வங்கியில் கையாடல் அதிகாரி தலைமறைவு
/
வங்கியில் கையாடல் அதிகாரி தலைமறைவு
ADDED : ஜன 04, 2026 04:58 AM

தட்சிணகன்னடா: வங்கியில், 71.41 லட்சம் ரூபாய் கையாடல் செய்த அதிகாரி, பணிக்கு வராமல் தலைமறைவானார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
தட்சிணகன்னடா மாவட்டம், உப்பினங்கடி தாலுகாவின் புலிகுஜ்ஜுவில் வசிப்பவர் சுப்பிரமணியம், 30. இவர் பெர்னே கிராமத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில், இணை மேலாளராக பணியாற்றினார். ஏ.டி.எம்.,களின் மேற்பார்வை பொறுப்பு முழுதும் இவரிடமே இருந்தது.
இவர், 2024 பிப்ரவரி 6 முதல் 2025 டிசம்பர் 16 வரை ஏ.டி.எம்.,களுக்கு நிர்ணயித்த அளவில் பணத்தை நிரப்பாமல், குறைவான தொகையை நிரப்பியுள்ளார். மீதி தொகையை, தன் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இப்படி படிப்படியாக, 71.41 லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளார்.
ஏ.டி.எம்.,மில் சரியான அளவில் பணம் நிரப்பாதது, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. வங்கிக்கு சென்று கணக்கு தணிக்கை செய்த போது, சுப்பிரமணியம் பணத்தை கையாடியது தெரிய வந்தது. வங்கியின் பாதுகாப்பு லாக்கரில் இருந்த, 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன. இதை இவரே தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
பேங்க் ஆப் பரோடாவின், மண்டல நிர்வாகி சந்திரசேகர், உப்பினங்கடி போலீஸ் நிலையத்தில், புகார் செய்தார். கைது பீதியால் சுப்பிரமணியம் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

