/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மதுக்கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மதுக்கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மதுக்கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மதுக்கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
ADDED : டிச 28, 2025 05:08 AM
பெங்களூரு: பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும், 31ம் தேதி காலை 6:00 மணி முதல் ஜனவரி, 1ம் தேதி அதிகாலை 1:00 மணி வரை மதுக்கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காத்திருந்தவர்களுக்கு ஆறுதலாக, நேற்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் அறிக்கை ஒவன்றை வெளியிட்டார்.
அதில், கூறியுள்ளதாவது:
பெங்களூரில் உள்ள மதுக்கடைகளில், வரும் 31ம் தேதி காலை 6:00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1:00 மணி வரை மது விற்பனை செய்யலாம். இதற்கு, கலால் துறையிடம் உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்துக்கு அனுமதி கிடைத்த கடைகளில் மட்டும், காலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை மதுபானம் விற்பனை செய்யலாம். இந்த உத்தரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மட்டுமே. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் மதுபிரியர்கள் உட்பட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், விலை ஏற்றத்தால் சரிந்து வரும் மது விற்பனையை சரிக்கட்டவே கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அதிக வாகன விபத்துக்கள் நிகழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

