/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் முதல்வராகட்டும்: பசவராஜ் ராயரெட்டி அதிரடி
/
சிவகுமார் முதல்வராகட்டும்: பசவராஜ் ராயரெட்டி அதிரடி
சிவகுமார் முதல்வராகட்டும்: பசவராஜ் ராயரெட்டி அதிரடி
சிவகுமார் முதல்வராகட்டும்: பசவராஜ் ராயரெட்டி அதிரடி
ADDED : ஏப் 15, 2025 08:42 PM
கொப்பால்; “எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால், சிவகுமார் முதல்வராகட்டும். அவரை தடுப்பது யார்?,” என, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கேள்வி எழுப்பினார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனக்கு கிடைத்த தகவலின் படி, மாநிலத்தில் முதல்வர் மாற்றப்பட மாட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளும் அவரே பதவியில் நீடிப்பார். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது. சிவகுமார் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார். தற்போதைக்கு மாற்றம் இருக்காது.
சித்தராமையாவை முதல்வராக்கியதில், நானும் ஒருவன். ஒரு வேளை முதல்வரை மாற்ற வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் குழு முடிவு செய்தால், சிவகுமார் முதல்வராகட்டும். அவரை யார் தடுப்பது? இந்த விஷயத்தில் அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டது, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அல்ல. மக்களின் கல்வி, பொருளாதாரம் பற்றிய அறிக்கை. ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று, ஆய்வு நடத்தினர். அறிக்கை 96 முதல் 97 சதவீதம் சரிதான். அறிக்கை பிரதிகள், அமைச்சர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதை யாரும் எதிர்க்கக் கூடாது. இதை சட்டமாக்கினால், சித்தராமையாவின் மதிப்பு உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

