/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நானும் முதல்வராக வேண்டும் பசவராஜ் ராயரெட்டி விருப்பம்
/
நானும் முதல்வராக வேண்டும் பசவராஜ் ராயரெட்டி விருப்பம்
நானும் முதல்வராக வேண்டும் பசவராஜ் ராயரெட்டி விருப்பம்
நானும் முதல்வராக வேண்டும் பசவராஜ் ராயரெட்டி விருப்பம்
ADDED : அக் 06, 2025 04:14 AM

கொப்பால் : ''காங்கிரசில் நானும் கூட, மூத்த தலைவர்தான். முதல்வராக வேண்டும் என்ற ஆசை, எனக்கும் உள்ளது. நான் முதல்வராவதில் என்ன தவறு,'' என, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கேள்வி எழுப்பினார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமார், முதல்வரானால் ஆகட்டும். அதில் என்ன தவறு. தாங்களும் முதல்வராக வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். நான் மட்டும் சளைத்தவனா. கட்சியில் நானும் சீனியர்தான். பல முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளேன். எனக்கும் முதல்வராக ஆசை உள்ளது.
முதல்வர் பதவியை எதிர்பார்ப்போர் பட்டியலில், நானும் இருக்கிறேன். நான் ஏன் பதவிக்கு வரக்கூடாது. முதல்வர் பதவியை பற்றி பேசினால், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், எனக்கும் நோட்டீஸ் அனுப்புவார்.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, முதல்வர் பதவி வழங்குவதை, நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் பிரதமராக வேண்டும் என்பது, என் விருப்பமாகும். ராகுலும் பிரதமராகட்டும்.
அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பின், எங்கள் கட்சியை சேர்ந்தவர் பிரதமராவார். பீஹார் தேர்தலுக்கு பின், நாட்டின் அரசியல் மாற்றம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. கார்கே அல்லது ராகுல் பிரதமரானாலும் ஆகலாம்.
நவம்பருக்கு பின், அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம் என, எதிர்பார்க்கிறோம். இதுவரை பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அமைச்சர் பதவியை நிர்வகிக்கும் சக்தி பல எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ளது. கொப்பால் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னாலுக்கும், அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என, விரும்புகிறேன்.
ஜாதிவாரி சர்வேயில், சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான். 60க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால், பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அனைத்து கேள்விகளுக்கும், பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.