/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி தோட்டத்திற்குள் அழகிய கணபதி கோவில்
/
காபி தோட்டத்திற்குள் அழகிய கணபதி கோவில்
ADDED : அக் 21, 2025 04:11 AM

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, சுற்றுலாவுக்கு எந்த அளவுக்கு பெயர் பெற்றதோ, அதே அளவு ஆன்மிக தலங்களுக்கும் பெயர் பெற்றது. சிருங்கேரி சாரதாம்பா, கலசா கலசேஸ்வரர் உட்பட மாவட்டத்தில் பல முக்கிய கோவில்கள் உள்ளன. இதில் ஒன்று, சாம்சே கிராமத்தில் உள்ள கணபதி கோவில்.
கோவில்கள் பெரும்பாலும் மலை உச்சியில், சமமான தளத்தில் இருக்கும். ஆனால் சாம்சே கணபதி கோவில், காபி தோட்டத்திற்குள் அமைந்து உள்ளது. 100 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோவில், இயற்கை எழிலுக்கு மத்தியில் பிரமிப்பை அளிக்கிறது. தினமும், காபி தோட்டத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், விநாயகரை தரிசித்த பின், வேலையை துவக்குகின்றனர். வனவிலங்கு தாக்குதலில் இருந்து விநாயகர் தங்களை பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
மூலஸ்தானத்தில் பாறையில் உருவான, பிரமாண்ட விநாயகர் சிலை உள்ளது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிராமத்தில் வசிப்போர் திரளாக கலந்து கொள்வதுடன், பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணியர் வாகனத்தில் செல்லும் போது, துாரத்தில் இருக்கும் பார்க்கும் போது, காபி தோட்டம் மட்டும் தான் உள்ளது என்று நினைத்து வருகின்றனர். இங்கு வந்து பார்க்கும் போது தான் கோவிலும் இருப்பது தெரிகிறது. காபி தோட்டங்களுக்குள் சென்று புகைப்படம் எடுத்து கொள்வதுடன், விநாயகரை தரிசித்தும் செல்கின்றனர். கலசாவில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் பச்சை, பசலென காட்சி அளிக்கும்
- நமது நிருபர் - .