/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - பெலகாவி 'வந்தே பாரத்' கர்நாடகாவுக்கு 9வது ரயில் வருகிறது

ADDED : ஆக 06, 2025 12:53 AM

''பெங்களூரு - பெலகாவி இடையே 'வந்தே பாரத்' ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்,'' என, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
புதுடில்லியில் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில், பெலகாவி - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
அதன்பின், எலக்ரானிக் சிட்டிக்கு சாலை வழியாக செல்லும் அவர், எலக்ரானிக் சிட்டி மெட்ரோவில் பயணிக்கும் அவர் ராகிகுட்டா ரயில் நிலையம் வரை பயணிக்கிறார். அங்கு நடக்கும் விழாவில், பெங்களூரின் ஆர்.வி., சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை, வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
ஆர்.வி., சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில், காணொளிக் காட்சி மூலம் கர்நாடகாவின் பெங்களூரு - பெலகாவி; நாக்பூர் அஜினி - புனே; அமிர்தசரஸ் - ஸ்ரீமதா வைஷ்ணோ தேவி ஆகிய மூன்று வந்தே பாரத் ரயில்களையும், கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
பெலகாவி வந்தே பாரத் ரயில், பெலகாவியில் இருந்து அதிகாலை 5:20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:50 மணிக்கு பெங்களூரு வந்தடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2:20 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு பெலகாவி சென்றடையும்.
இந்த ரயிலால், பெங்களூரு, துமகூரு, தாவணகெரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவி பகுதி மக்கள் பயனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பெங்களூரில் இருந்து மைசூரு, கலபுரகி, தார்வாட், தமிழகத்தின் கோவை, சென்னை, மதுரை, கோவாவின் மட்கான், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஒன்பதாவதாக பெலகாவிக்கு இயக்கப்படுகிறது.
- நமது நிருபர் -
''பெங்களூரு - பெலகாவி இடையே 'வந்தே பாரத்' ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்,'' என, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
புதுடில்லியில் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரின் ஆர்.வி., சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை, வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.