/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு போக்குவரத்து 'எக்ஸ்' பதிவில் விளாசல்
/
பெங்களூரு போக்குவரத்து 'எக்ஸ்' பதிவில் விளாசல்
ADDED : நவ 12, 2025 06:25 AM
பெங்களூரு: பெங்களூரின் 18 கி.மீ., துார பயணத்தை, மும்பையின் 120 கி.மீ., துார பயணத்துடன் ஒப்பிட்டு, 'எக்ஸ்' பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பூங்கா நகரம், தகவல் தொழில்நுட்ப நகரம் உட்பட பல புனைப்பெயரால் அழைக்கப்படும் பெங்களூரு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் என்றும் பெயர் எடுத்துள்ளது. நகரின் முக்கிய சாலையில் அரை கி.மீ., துாரத்தை கடக்கவே ஒரு மணி நேரம் ஆன நிகழ்வுகளும் நடந்தது உண்டு.
இந்நிலையில், ராஜிவ் மந்திரி என்பவர் தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'பெங்களூரு போக்குவரத்து மிகவும் நம்பிக்கை அற்றதாகிவிட்டது. யஷ்வந்த்பூரில் இருந்து ஜெயநகருக்கு 18 கி.மீ., துாரம் சாலை மார்க்கமாக பயணம் செல்வது, மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் இருந்து புனே வரை செல்லும் 120 கி.மீ., துாரத்திற்கு சமமாக உள்ளது. இது சரிசெய்ய முடியாத, மிகப்பெரிய பேரிழிவு' என பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில், ராஜிவ் மந்திரி பதிவுக்கு ஆதரவாக, நிறைய பேர் கருத்து தெரிவிக்கின்றனர். 'யஷ்வந்த்பூரில் இருந்து ஜெயநகருக்கு நேரடி மெட்ரோ ரயில் உள்ளது; நீங்கள் ஏன் மெட்ரோவை பயன்படுத்த கூடாது?' என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

