sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

டி.ஜி., அணைக்கு எத்தினஹொளே நீர் தாமதம்; பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை

/

டி.ஜி., அணைக்கு எத்தினஹொளே நீர் தாமதம்; பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை

டி.ஜி., அணைக்கு எத்தினஹொளே நீர் தாமதம்; பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை

டி.ஜி., அணைக்கு எத்தினஹொளே நீர் தாமதம்; பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை


ADDED : ஏப் 17, 2025 06:49 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திப்பகொண்டனஹள்ளி அணை சீரமைப்பு பணிகளை, பெங்களூரு குடிநீர் வாரியம் முடித்துள்ளது. ஆனால், எதினஹொளேவில் இருந்து தண்ணீர் வராததால், அணையில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வினியோகிக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு மக்களுக்கு ஒரு காலத்தில், திப்ப கொண்டனஹள்ளி அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பெங்களூரு - மாகடி பாதையில், தாவரகெரேவில் இருந்து 8 கி.மீ., தொலைவில் டி.ஜி.ஹள்ளி அணை கட்டப்பட்டது.

இந்த அணை 1930ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1933லிருந்து பெங்களூருக்கு குடிநீர் வினியோகம் துவங்கியது. தினமும் 27 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. நாளடைவில் படிப்படியாக தண்ணீர் வினியோகம் அதிகரித்து, 1974ல் 135 எம்.எல்.டி.,யாக அதிகரித்தது.

அதன்பின், பெங்களூரில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரித்ததால், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து, அணையின் நீர் முழுதுமாக அசுத்தமடைந்தது. குடிப்பதற்கு தகுதியற்றதானது. எனவே டி.ஜி., அணையில் இருந்து குடிநீர் வினியோகம், 2012 டிசம்பரில் இருந்து நிறுத்தப்பட்டது.

குடிநீர் வாரியம் பெங்களூரில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வினியோகிக்க துவங்கியது. அன்று முதல் இன்று வரை, பெங்களூரு மக்கள் காவிரி நீரை நம்பியுள்ளனர்.

கோடைக்காலத்தில் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. அப்போது தேவைக்கு தகுந்தபடி குடிநீர் வினியோகிப்பது, குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. பெங்களூரின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மக்கள் தொகையும் 1.50 கோடியை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் குடிநீருக்கு காவிரியை மட்டும் நம்பி இருந்தால் கஷ்டம். மாற்று வசதி செய்ய வேண்டும் என, வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.

குடிநீர் வாரியமும் டி.ஜி., அணையை சீரமைத்து, தண்ணீரை சேகரித்து பெங்களூருக்கு வினியோகிக்க திட்டமிட்டது. அணை அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் பம்பிங் நிலையம் உட்பட, அனைத்து பணிகளை குடிநீர் வாரியம் முடித்துள்ளது.

ஆனால் டி.ஜி., அணைக்கு, எத்தினஹொளே நீர் வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இதனால், சுத்திகரிப்பு, சுத்திகரிப்பு நிலையம், பம்பிங் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் துருப்பிடிக்காமல் பார்த்து கொள்வதே, அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

அர்க்காவதி மற்றும் குமுதவதி ஆறுகளின் தண்ணீர் டி.ஜி., அணைக்கு வருகிறது. எத்தினஹொளேவில் இருந்து தண்ணீரை டி.ஜி., அணைக்கு பாய்ச்ச வேண்டும். ஆனால், இன்னும் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வருவதற்குள் இயந்திரங்கள் துருப்பிடிக்கும் என, அஞ்சுகிறோம்.

இயந்திரங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் நோக்கில், தினமும் ஐந்து முதல் பத்து எம்.எல்.டி., நீரை சுத்திகரித்து, அதை காவிரி நீருடன் கலந்து பெங்களூரின் மேற்கு பகுதிகளுக்கு வினியோக்கிறோம். அதே போன்று சுத்திகரிக்கப்பட்ட நீரை, காவிரி நீருடன் கலந்து பொது மக்களுக்கு வினியோகிக்கும்படி, இந்திய அறிவியல் ஆய்வக விஞ்ஞானிகள், சிபாரிசு செய்துள்ளனர். அதன்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us