/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
/
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
UPDATED : பிப் 22, 2025 02:10 PM
ADDED : பிப் 22, 2025 03:48 AM

பெங்களூரு: பெங்களூருவில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோரமங்கலா சந்திப்பில் 33 வயதுடைய பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அருகே வந்து பேசிக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் பேச்சுக்கு பின்னர், பெண்ணை, அந்த நபர் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த ஆண் நண்பரின் நண்பர்கள் 3 பேர் சொல்லி வைத்தபடி அங்கு வந்துள்ளனர். 4 பேரும் கூட்டு சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அந்த பெண்ணை அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர். அதிர்ச்சி மற்றும் பயத்தில் இருந்த பெண் கோரமங்கலா போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கோரமங்கலா சந்திப்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி நடந்த சம்பவம் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் தொடர் விசாரணை நடத்தி வட இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு தென்கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சாரா பாத்திமா கூறி இருப்பதாவது;
112 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு நாங்கள் விரைந்து சென்றோம். கோரமங்கலா போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் வன்கொடுமை பற்றிய வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது.
4 பேர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை கைது செய்துள்ளோம். அவர்களின் 3 பேரின் பெயர்கள் அஜித், விஷ்வாஸ், ஷிவு என்பதாகும். 3 பேர் ஹோட்டல் ஒன்றில் சப்ளையர்களாகவும், ஒருவர் சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.
அவர்களில் 3 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். ஒருவர் உத்தராகாண்டில் இருந்து வந்தவர். பாதிக்கப்பட்ட பெண் டில்லியில் இருந்து வந்தவர். திருமணமானவர். கணவருடன் பெங்களூருவில் இருக்கிறார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். இதே பகுதியில் கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வருகிறார். வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.