/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீஹார் வாலிபர் கொலை; சிறுவன் உட்பட 2 பேர் கைது
/
பீஹார் வாலிபர் கொலை; சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : ஏப் 13, 2025 07:23 AM
பீன்யா : பீஹார் வாலிபர் கொலை வழக்கில், சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ்குமார், 25. கட்டுமான தொழிலாளி. பெங்களூரு பீன்யா அருகே கடபகெரேயில் வசித்தார். கடந்த 6ம் தேதி கரிஹோபனஹள்ளி என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பீன்யா போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கில் கரிஹோபனஹள்ளி கிராமத்தின் சந்தோஷ் குமார், 19, மற்றும் 16 வயது சிறுவனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கட்டுமான வேலை செய்த விகாஸ்குமார் தினமும் வேலை முடிந்து, வீட்டிற்கு தனியாக நடந்து செல்வார். இதை கவனித்த சந்தோஷ் குமார், தன் நண்பரான 16 வயது சிறுவனுடன் சேர்ந்து விகாஸிடம் இருந்து பணம் பறிக்க திட்டம் போட்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விகாஸ்குமாரை புதருக்குள் இழுத்துச் சென்றனர்; பணம் தரும்படி கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறியதால், கல்லால் தாக்கிக் கொன்றுள்ளனர்.
அவரது சட்டை, பேன்ட் பையில் பார்த்தபோது உண்மையிலேயே பணம் இல்லை. இதனால் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.