/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பில்லி ஜீன் கிங்' டென்னிஸ் பெங்களூரில் இன்று துவக்கம்
/
'பில்லி ஜீன் கிங்' டென்னிஸ் பெங்களூரில் இன்று துவக்கம்
'பில்லி ஜீன் கிங்' டென்னிஸ் பெங்களூரில் இன்று துவக்கம்
'பில்லி ஜீன் கிங்' டென்னிஸ் பெங்களூரில் இன்று துவக்கம்
ADDED : நவ 14, 2025 05:10 AM

பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடக்கும் பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி இன்று துவங்குகிறது.
'பில்லி ஜீன் கிங்' என்ற பெயரில் பெண்களுக்காக இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த டென்னிஸ் போட்டிகளை, முதல் முறையாக இந்தியாவில் நடத்த, கர்நாடக லான் டென்னிஸ் சங்கம் முயற்சி எடுத்தது.
இந்த முயற்சியின் பலனாக பெங்களூரில் போட்டிகளை நடத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்கள், கப்பன் பார்க் வளாகத்தில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா மைதானத்தில் குரூப் ஜி பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன. இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்லோவேனியா அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா - ஸ்லோவேனியா; நாளை மறுநாள் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோது கின்றன.
இந்திய அணியில் சஹஜா யமலபள்ளி, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி, அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, பிரார்த்தனா தம்போர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். வீராங்கனையரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீராங்கனையர் புடவையில் வந்து கவனத்தை ஈர்த்தனர்.
இந்திய அணி வீராங்கனையர் தங்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை, கர்நாடக லான் டென்னிஸ் சங்கத்திற்கு வழங்கினர்.
கடந்த 1960 காலகட்டத்தில் தேசிய, சர்வதேச அளவில் டென்னிசில் சாதனை படைத்த வீராங்கனையர் கவுரவிக்கப்பட்டனர்.
சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் வீராங்கனை ஷில்பா புட்டராஜ் கலந்து கொண்டார்.

