/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிட் மைசூரு வாக்கத்தான்: 12,000 பேர் பங்கேற்பு
/
பிட் மைசூரு வாக்கத்தான்: 12,000 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 12, 2026 06:48 AM

மைசூரு: மைசூரு மாநகராட்சி, மைசூரு பல்கலைக்கழகம் உட்பட அமைப்புகள் இணைந்து நடத்திய 5 கி.மீ., 'பிட் மைசூரு வாக்கத்தானில்', 12,000 பேர் பங்கேற்றனர்.
மைசூரு மாநகராட்சி, மைசூரு பல்கலைக்கழகம், மைசூரு ஜிம் சங்கம், ஜி.எஸ்.எஸ்., குழுமம் உட்பட பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் சார்பில் மைசூரை ஆரோக்கியமான, சுத்தமான, பசுமையான, பாதுகாப்பான நகரமாக மாற்றும் நோக்கத்துடன், நேற்று 5 கி.மீ., 'பிட் மைசூரு மாரத்தான்' நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, 8,000 பேர் பதிவு செய்திருந்தனர். நேற்று விடுமுறை என்பதால் வயது வரம்பின்றி பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள் என 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் மஹாதேவப்பா பேசுகையில், ''மைசூரை சுத்தமான, ஆரோக்கியமான நகரமாக மாற்றும் நோக்கில் இந்த வாக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் முக்கியம் என்பது, இதன் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
மைசூரு பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரியில் அதிகாலையே குவிந்த மக்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பல்கலையில் இருந்து புறப்பட்ட மாரத்தான், போகடி சாலை, சரஸ்வதிபுரம் தீயணைப்பு நிலைய சாலை, மஹாராஜா கல்லுாரி மைதானம் சதுக்கம், கிருஷ்ணராஜா பவுல்வர்டு சாலை, ஹூன்சூர் பிரதான சாலை, படுவரஹள்ளி சந்திப்பு வழியாக செனட் பவன் வளாகத்தில் நிறைவடைந்தது.

