தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., - எம்.எல்.ஏ., மனைவி பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் காங்கிரஸ் சிவலிங்கே கவுடா

 பா.ஜ., - எம்.எல்.ஏ., மனைவி பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் காங்கிரஸ் சிவலிங்கே கவுடா

 பா.ஜ., - எம்.எல்.ஏ., மனைவி பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் காங்கிரஸ் சிவலிங்கே கவுடா


ADDED : பிப் 06, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டசபையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகரின் மனைவி பற்றி பேசியதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா மன்னிப்பு கேட்டார்.

கர்நாடக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அரிசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா பேசிய போ து, அவரை பேசவிடாமல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். குறிப்பாக, சரணு சலகர், வேதவியாஸ் காமத் ஆகியோர், சிவலிங்கே கவுடாவை தேங்காய் திருடன் என்று விமர்சித்தனர். இதனால், கடுப்பான சிவலிங்கே கவுடா, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஒருமையில் திட்டினார்.

சரணு சலகரை பார்த்து, 'உன் மனைவி தாசில்தாராக உள்ளார். அவரை வைத்து நீ கொள்ளை அடிக்கிறாய்' என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து சிவலிங்கே கவுடா நேற்று அளித்த பேட்டி:

சட்டசபையில், நான் எப்போது பேச எழுந்தாலும், பா.ஜ.,வின் வேதவியாஸ் காமத், சரணு சலகர், சுரேஷ் கவுடா போன்றோர் என்னை பேச விடுவது இல்லை. அவர்கள் என்னை குறி வைக்கின்றனர். ஒரு முறை நான் அவர்களிடம் கேட்ட போது, 'எங்களுக்கு வந்த உத்தரவின்படி, உங்களை பேச விடாமல் செய்கிறோம்' என்றனர். அவர்களுக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியவில்லை.

சட்டசபையில் தனிப்பட்ட பி ரச்னைகளை பேசுவது சரியல்ல. என்னை தேங்காய் திருடன் என்று விமர்சிக்கும் போது, நான் அமைதியாக இருக்க வேண்டுமா. என்னை பற்றி அவர்களும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத் தினர். நான் பேசியது மட்டும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அவர்கள் என்னை திட்டிய ஆடியோ கிடைத்தால் வெளியிடுவேன்.

சரணு சலகர் மனைவி பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மற்ற வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். ம.ஜ.த.,வில் இருந்து வெளியேறிய பிறகு, எனது தொகுதியில் நியாயமாக வேலை செய்கிறேன். எதிர்காலத்தில் சட்டசபையில் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வ ர வேண்டும்.

என்னை பேச துாண்டியதே பா.ஜ., தான். ம.ஜ.த.,வில் இருந்து வந்தால், அமைச்சர் பதவி தருவதாக என்னிடம் கூறினர். எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி, கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us