/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானிக்கு ஜாமின்
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானிக்கு ஜாமின்
ADDED : மார் 12, 2026 05:55 AM

பெங்களூரு: கதக் மாவட்டம், சிரஹட்டியில் சாலையோரம் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு டெண்டர் கொடுக்க, கான்ட்ராக்டர் விஜயிடம் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கடந்த மாதம் 21ம் தேதி, சிரஹட்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி, 37, அவரது உதவியாளர்கள் இருவரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமின் கேட்டு சந்துரு லமானி வக்கீல், நீதிமன்றத்தில் மனு செய்தார். அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனால் கடுப்பான நீதிபதி சந்தோஷ் கஜனான் பட், உங்கள் மனுதாரர் லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார். அவசர மனுவாக விசாரிக்க வேண்டியது இல்லை என்று கறாராக கூறினார்.
இந்நிலையில் மனு மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதி, எம்.எல்.ஏ.,வுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

