/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., போலி கடிதம் முதல்வர் அலுவலகம் புகார்
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., போலி கடிதம் முதல்வர் அலுவலகம் புகார்
பா.ஜ., - எம்.எல்.ஏ., போலி கடிதம் முதல்வர் அலுவலகம் புகார்
பா.ஜ., - எம்.எல்.ஏ., போலி கடிதம் முதல்வர் அலுவலகம் புகார்
ADDED : பிப் 14, 2026 04:59 AM
பெங்களூரு: சுகாதாரத்துறை அதிகாரியை, கலால்துறைக்கு இடமாற்றும்படி உத்தரவிட்டு, முதல்வர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார். அது போலியானது என, முதல்வர் அலுவலகம் குற்றம்சாட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.
பா.ஜ. , - எம்.எல்.ஏ., சுனில்குமார், முதல்வர் சித்தராமையா எழுதி யதாக கூறப்படும் கடிதத்தை, நேற்று காலை, 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
மாண்டியா மாவட்டத்தின், சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரை, மைசூரு மாவட்டத்தின் கலால்துறையில் நியமிக்கும்படி உத்தரவிட்டு, முதல்வரே நேரடியாக சுகாதாரத்துறை பொது செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது, முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி தடம் புரண்டதற்கு சிறந்த உதாரணம்.
முதல்வரின் உத்தரவு, கலால் மற்றும் சுகாதாரத்துறை இடமாற்ற விதிமுறைகளுக்கு எதிரானது. கலால் துறையில் 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழல் நடந்துள்ளது. இது போன்ற லஞ்ச முறைகேடுக்கு பின்னால், சட்டவிரோதமான இடமாற்ற உத்தரவுகள் இருக்கக்கூடும். சுகாதாரத்துறையில் டாக்டர்கள் பற்றாக்குறையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இத்துறையின் மருத்துவ அதிகாரியை, கலால்துறைக்கு இடமாற்றி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் எழுதியதாக கூறப்படும் கடிதம் போலியானது என, முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் கடிதம் குறித்து, விசாரணை நடத்தும்படி விதான்சவுதா போலீஸ் நிலையத்தில், முதல்வரின் இணை செயலர் புகார் அளித்துள்ளார்.

