/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவை பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு
/
துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவை பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு
துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவை பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு
துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவை பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு
ADDED : நவ 18, 2025 04:56 AM
பெங்களூரு: மெட்ரோ ரயில் சேவையை துமகூரு வரை நீட்டிக்க நம்ம மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் 96 கி.மீ., துாரத்தில் ஊதா, பச்சை, மஞ்சள் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க உதவுவதால் பலரும் இதை விரும்புகின்றனர்.
மெட்ரோ ரயில் சேவையை துமகூரு வரை நீட்டிக்க 'நம்ம மெட்ரோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரூ.20.649 கோடி இதற்காக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. பெங்களூரு - துமகூரு 59.6 கி.மீ., துாரம் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதற்கு தோராயமாக 20,649 கோடி ரூபாய் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசு - தனியார் கூட்டு மாதிரியின் கீழ் உருவாக்கப்பட உள்ளது.
இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் 4.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தங்கள் திட்ட அறிக்கையை வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் 26 ரயில் நிலையங்கள் அமைக்கப்படலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''துமகூருக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பதற்கு, மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. இந்த திட்டத்தின் நன்மை, தீமைகள் குறித்து அரசு விரிவாக விவாதிக்கும்,'' என்றார்.
புறநகர் ரயில் பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டம் மெட்ரோ ரயில் சேவை. இது நகர்ப்புறத்துக்கு மட்டுமே பொருந்தும். எனவே, மெட்ரோ ரயில் நீட்டிப்பதற்கு பதிலாக, புறநகர் ரயில் சேவையை துவங்க வேண்டும். 1 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோவை விரிவுபடுத்த 450 கோடி ரூபாய் செலவாகும்.
அதுவே புறநகர் ரயிலுக்கு, ஒரு கி.மீ.,க்கு 150 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். மெட்ரோ ரயில்களில் குறைவான பயணியர் அமர்ந்தவாறும், பெரும்பாலானோர் நின்றபடியே பயணம் செய்ய முடியும். குறுகிய துாரத்துக்கு தான் பயணியர் நின்றபடி பயணம் செய்ய முடியும்; நீண்ட துாரத்துக்கு பயணம் செய்வது கடினம்.
இதுபோன்ற திட்டங்களை, யார் பேச்சை கேட்டு மாநில அரசு செய்கிறது. என்ன வேலையை எங்கு செய்ய வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் அரசுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

