/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் 'சஸ்பெண்ட்' ரத்து
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் 'சஸ்பெண்ட்' ரத்து
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் 'சஸ்பெண்ட்' ரத்து
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் 'சஸ்பெண்ட்' ரத்து
ADDED : மே 26, 2025 12:23 AM

பெங்களூரு : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ., -எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை சபாநாயகர் காதர் வாபஸ் பெற்றார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை 'ஹனிடிராப்' செய்ய சொந்த கட்சியினரே முயற்சி செய்ததாக குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்காக தொட்டனகவுடா பாட்டீல், அஸ்வத் நாராயணா, பைரதி பசவராஜ், விஸ்வநாத், எம்.ஆர்.பாட்டீல், சன்னபசப்பா, சுரேஷ்கவுடா, உமாநாத் கோட்டியான், சாணு சலகர், சைலேந்திர பெல்டல், ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, ஹரிஷ், பரத் ஷெட்டி, முனிரத்னா, பசவாஜ் மத்திமோடு, தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி ஆகிய 18 பேரை ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டார்.
இதனால் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர்.
கவர்னரிடமும் புகார் அளித்தனர். இருப்பினும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியாக, நீதிமன்றத்தை நாட திட்டமிட்டனர்.
இதனிடையே சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும்படி, சபாநாயகரிடம் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
இதுதொடர்பாக நேற்று மாலையில் விதான் சவுதாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சபாநாயகர் காதர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், முதல்வரின் அரசியல் துறை செயலர் கோவிந்தராஜு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் அசோக் உறுதி அளித்தார்.
கூட்டத்துக்குப் பின் காதர் அளித்த பேட்டி:
எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தங்கள் தவறை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இனிமேல், இது போன்று செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது சரியல்ல. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே, அவர்கள் இரண்டு மாதங்களாக சஸ்பெண்டில் உள்ளனர். எனவே, சபாநாயகர், முதல்வர் ஆகிய இருவரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சாதகமாக உத்தரவு அளித்தனர்.
அசோக், எதிர்க்கட்சித் தலைவர்