/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு நிதி கேட்கும் பா.ஜ.,
/
மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு நிதி கேட்கும் பா.ஜ.,
மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு நிதி கேட்கும் பா.ஜ.,
மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு நிதி கேட்கும் பா.ஜ.,
ADDED : டிச 09, 2025 06:34 AM

பெலகாவி: ''மதுபான பிரியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்,'' என பா.ஜ., உறுப்பினர் ரவிகுமார் மேல்சபையில் வலியுறுத்தினார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - ரவிகுமார்: மதுபானம் விற்பனை மற்றும் அதன் மீதான வரியால், மாநில அரசுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் மூன்று சதவீதம் மக்கள், குடிப்பழக்கத்தால் பாதிப்படைகின்றனர். இம்முறை கலால் துறைக்கு, மாநில அரசு 43,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது.
காடு, மேடுகளில் மதுபான பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஆற்றங்கரை, கோவில்களின் அருகில் மதுபான பாட்டில்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும், பள்ளிகளின் அருகில் மதுபானம் விற்கின்றனர். மதுபான கடைகளால் சமுதாயம் பாழாகிறது. பலர் இறக்கின்றனர். பெண்கள் விதவைகளாகின்றனர்.
மதுபானம் விற்பனை மற்றும் அதன் மீதான வரியால் ஆயிரக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் சிறிதளவு தொகையை, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.
கலால்துறை அமைச்சர் திம்மாபூர்: மாநிலத்தில் மதுபான விற்பனை, 19 சதவீதம் குறைந்துள்ளது. எனவே மதுபான பிரியர்களின் சிகிச்சைக்கு ஒதுக்க முடியாது.
அதன்பின் கூட்டத்தொடர், இன்று காலை 11:00 மணிக்கு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்தார்.

