sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'மக்களை முட்டாளாக்க முடியாது' பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்

/

 'மக்களை முட்டாளாக்க முடியாது' பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்

 'மக்களை முட்டாளாக்க முடியாது' பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்

 'மக்களை முட்டாளாக்க முடியாது' பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்


ADDED : பிப் 19, 2026 07:18 AM

Google News

ADDED : பிப் 19, 2026 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''எம்.எல்.ஏ.,க்களை வெளி நாட்டுக்கு அனுப்பி, மக்களை முட்டாளாக்க முடியாது,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி நிர்வகிப்பை பார்த்து, மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இத்தகைய ஆட்சியை நடத்த, அவருக்கு வெட்கம் இல்லையா. கர்நாடக அரசியல் மோசமான நிலைக்கு செல்கிறது. அவரது ஆட்சியை பார்த்து, மக்கள் சிரிக்கின்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் என்ன காரணத்துக்காக, வெளி நாட்டுக்கு சுற்றுலா செல்கின்றனர் என்பதை, புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, மக்கள் முட்டாள்கள் அல்ல. கர்நாடகாவில் 90 சதவீதம் மக்கள் கல்வி கற்றவர்கள்.

நீங்கள் (சித்தராமையா) என்ன செய்கிறீர்கள் என்பது, மக்களுக்கு புரியும். மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது.

எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக, மக்கள் ஓட்டு போடவில்லை. ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளவும், மோதிக்கொள்ளவும் அதிகாரத்தை அளிக்கவில்லை. மக்களுக்காக பணியாற்றவும், மேம்பாட்டு பணிகளை செய்யவும் மக்கள் ஓட்டு போட்டனர்.

எதுவாக இருந்தாலும், சித்தராமையா நேரடியாக கூற வேண்டும். பதவி நாற்காலியை காப்பாற்றி கொள்ள, இவ்வளவு சர்க்கஸ் தேவையா. இதனால் மக்களுக்கு என்ன பயன்.

கர்நாடகாவில் ஆட்சியும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. கூச்சல், கூப்பாடு மட்டுமே உள்ளது. சித்தராமையா நாடகத்தை நிறுத்திவிட்டு, மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.

நடேஷுக்கு பதவி உயர்வு வழங்க, லஞ்சம் கொடுத்ததாக சமூக ஆர்வலர் சிநேஹமயி கிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். அவர் பெரும் ஊழல் அதிகாரி. இதே அதிகாரியை காப்பாற்ற, சித்தராமையா அரசு முற்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டால் தனக்கு அபாயம் என்பதால், ஊழல் அதிகாரியை சித்தராமையா காப்பாற்றினார்.

விசாரணை நடந்து வரும் நிலையில், ஒரு ஊழல் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய உதாரணம், நாட்டில் எங்காவது உள்ளதா.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us