/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹலால் பட்ஜெட்'... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்
/
'ஹலால் பட்ஜெட்'... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்
'ஹலால் பட்ஜெட்'... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்
'ஹலால் பட்ஜெட்'... கர்நாடக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ., விமர்சனம்
UPDATED : மார் 07, 2025 04:13 PM
ADDED : மார் 07, 2025 02:34 PM

பெங்களூரு: கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், முஸ்லிம்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில், சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க ரூ.150 கோடியும், உருது பள்ளிகளுக்கு ரூ.100 கோடியும், இமாம்களுக்கு மாதம் ரூ.6,000 வெகுமதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முஸ்லிம்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மால்வியா, கர்நாடகா அரசின் பட்ஜெட், முழுக்க முழுக்க முஸ்லிம்களின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் வழங்க முடியாது. இது அரசியலமைப்புக்கு புறம்பான பட்ஜெட்டாகும். இந்திய அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டதே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல, கர்நாடக பா.ஜ., தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், 'ஹலால் பட்ஜெட்' என விமர்சித்துள்ளது.