தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமாருடன் எவ்வித தொடர்பும் இல்லை சொல்கிறார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா

 சிவகுமாருடன் எவ்வித தொடர்பும் இல்லை சொல்கிறார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா

 சிவகுமாருடன் எவ்வித தொடர்பும் இல்லை சொல்கிறார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா


ADDED : ஜூன் 26, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: ''முதல்வர் சிவகுமாருடன் எனக்கு வணிக ரீதியாக எந்த தொடர்பும் இல்லை; எம்.எல்.சி., தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டவர்கள் யார் என்ற உண்மை வெளிவரும்,'' என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.

எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ஓட்டு போட்டது பற்றி மேலிட தலைவர்களிடம் தெரிவிக்க, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா டில்லி சென்றிருந்தார்.

சத்தியம் நேற்று காலை டில்லியில் இருந்து நேராக மங்களூரு வந்த அவர், கார் மூலம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு சென்றார்.

சுவாமி தரிசனம் முடிந்த பின், கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக் டேயை சந்தித்து பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

எம்.எல்.சி., தேர்தலில் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், தொண்டர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் முழுதும் விவாதிக்கப் படுகிறது.

நானும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எம்.எல்.ஏ.,க்களை, மஞ்சுநாதா கோவிலுக்கு அழைத்து வந்து சத்தியம் வாங்க உள்ளதாக கூறி இருந்தேன்.

மூத்த தலைவர்கள் கேட்டு கொண்டதால் அந்த முடிவை கைவிட்டு உள்ளேன்.

கட்சி மாறி ஓட்டு போட்டவர்கள் யார் என்ற உண்மை வெளி வரும். கட்சி மேலிடத்திடம் அனைத்து தகவல்களும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசியால், மாநில தலை வராக உள்ளேன்.

சுற்றுப் பய ண ம் கட்சிக்கு துரோகம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. தர்மஸ்தலாவுக்கு பக்தனாக வந்து உள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை.

வரும் நாட்களில் மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்துவேன். மக்கள் விரோத காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.

எனக்கும், முதல்வர் சிவகுமாருக்கும் இடையில் வணிக தொடர்போ, தனிப்பட்ட தொடர்போ இல்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us