/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமராஜா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைவர்கள் மல்லுக்கட்டு
/
சாமராஜா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைவர்கள் மல்லுக்கட்டு
சாமராஜா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைவர்கள் மல்லுக்கட்டு
சாமராஜா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைவர்கள் மல்லுக்கட்டு
ADDED : ஜன 14, 2026 03:33 AM

மைசூரு சாமராஜா தொகுதியில் யார் போட்டியிடுவது என, எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நகருக்கு வருகை தந்திருந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், கட்சி தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, 'அடுத்த சட்டசபை தேர்தலில், சாமராஜா தொகுதியில் போட்டியிடுவேன்' என்று அறிவித்திருந்தார்.
இதற்கு அத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., நாகேந்திரா எதிர்ப்பு தெரிவித்து, 'நானே வேட்பாளர்' என்று பதிலடி கொடுத்தார். அடுத்ததாக, கட்சியின் பிரமுகரும், நியூமராலஜிஸ்டுமான டாக்டர் சுஷ்ருதா கவுடா, கட்சி பிரமுகர் ஜெயபிரகாஷ் ஆகியோரும், தாங்களும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தனர்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதற்குள் தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கட்சி மேலிடம், இப்பிரச்னையை தீர்த்து வைக்க, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை, மைசூருக்கு அனுப்பி வைத்தது.
அவரும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், எம்.பி., யதுவீர், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகேந்திரா, ஜெயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், டாக்டர் சுஷ்ருதா கவுடா வரவில்லை.
கூட்டத்தில், 'சீட்' எதிர்பார்த்தவர்கள் சிரித்தபடி இருப்பதாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் குமுறலுடன் இருப்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.
இதுகுறித்து அசோக்கிடம் கேட்டபோது, 'நா ன் மைசூரை சேர்ந்தவன் அல்ல. தொகுதியில் சீட் கேட்பவரின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்றால், 2028 சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக பா.ஜ., வெல்லும் என்பது தெளிவாகிறது' என்றார். இதுபோன்று நாகேந்திராவும், சமீபத்தில் அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் எதுவும் பேசவி ல்லை' என்று மழுப்பினார்.
கூட்டத்தில், 'மாநில காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் போது, தொகுதிக்காக சண்டையிடாதீர்கள். கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள். நமக்குள்ள வெற்றி வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவுரை கூறியதாக தெரிகிறது.
ஏன் இந்த நிலை?@@
கர்நாடகாவின் வடமாவட்டங்கள், கல்வியில் இன்னும்
பின்தங்கியுள்ளன என்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அரசை
குறை சொல்வது போல, கலபுரகியில் நேற்று முன்தினம் பேசினார். இதை கிண்டல்
செய்யும் விதமாக, 'நீங்கள் எவ்வளவு தான் ஒலிபெருக்கியில் கத்தினாலும்,
சித்தராமையாவுக்கு காது கேட்காது' என்று, பா.ஜ., தரப்பில் வெளியிட்டுள்ள
கேலிசித்திரம். கட்சியின் மூத்த தலைவரான உங்களுக்கு ஏன் இந்த நிலை என்றும்,
அதில் பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
- நமது நிருபர் -

