/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என்.ஐ.ஏ.,யிடம் தர்மஸ்தலா வழக்கு பா.ஜ.:, தலைவர்கள் கோரிக்கை
/
என்.ஐ.ஏ.,யிடம் தர்மஸ்தலா வழக்கு பா.ஜ.:, தலைவர்கள் கோரிக்கை
என்.ஐ.ஏ.,யிடம் தர்மஸ்தலா வழக்கு பா.ஜ.:, தலைவர்கள் கோரிக்கை
என்.ஐ.ஏ.,யிடம் தர்மஸ்தலா வழக்கு பா.ஜ.:, தலைவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 24, 2025 11:12 PM

பெங்களூரு:தர்மஸ்தலா வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா ஆகியோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, முதலில் செய்ய வேண்டிய விஷயத்தை கடைசியாக செய்து உள்ளது. புகார் தாரரின் பின்புலம், தகுதி, ஆதாரங்களை சரிபார்க்காமல் விசாரணையை துவக்கியது தவறு. எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்கப்படவில்லை. புகார்தாரர் சின்னையா கைது செய்யப்பட்ட பிறகே, உண்மையான விசாரணை துவங்கி உள்ளது.
சின்னையாவின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், வழக்கில் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கும் என மக்கள் நினைக்ககூடும். இதுபோன்ற சந்தேகங்களை தவிர்ப்பதற்காக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற மத்திய புலனாய்வு நிறுவனத்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா: கர்நாடகாவில் ஹிந்து மத வழிபாட்டு தலங்கள் குறிவைக்கப்பட்டு உள்ளன. தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்ட போது, பல சந்தேகங்கள் எழுந்தன. தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்பியவரின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது தெரிய வேண்டும். இதற்காக என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் சரியாக இருக்கும்.
தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரர் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இதில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. வழக்கில் உண்மை வெளிவருவது முக்கியம். சதிகாரர்களை கண்டறிவதும் முக்கியம். துணை முதல்வர் சிவகுமார் ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியது வரவேற்கத்தக்கது.
இந்த அமைப்பில் இளமை காலத்தில் அவர் இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவருக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த அமைப்பு மனித குலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.