தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜி.பி.ஏ., தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தலைவர்கள் வியூகம்

 ஜி.பி.ஏ., தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தலைவர்கள் வியூகம்

 ஜி.பி.ஏ., தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தலைவர்கள் வியூகம்


ADDED : பிப் 08, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. அதற்காக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த, 2020 செப்டம்பர் 10ம் தேதி, அன்றைய பெங்களூரு மாநகராட்சியான, இன்றைய ஜி.பி.ஏ.,வின் மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்தது. அன்று முதல் தேர்தல் நடத்தபடவில்லை. நிர்வாக அதிகாரிகளின் நிர்வகிப்பில் செயல்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

இதற்கிடையே ஜி.பி.ஏ.,வுக்கு, நடப்பாண்டு ஜூன் மாதம், 30 ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஜி.பி.ஏ., யின் நிர்வாகத்தை கைப்பற்ற, பா.ஜ., மும்முரமாக உள்ளது.

இது தொடர்பாக, பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ஜி.பி.ஏ., தேர்தல் பொறுப்பாளர் ராம் மாதவ், துணை பொறுப்பாளர்கள் சதீஷ் புனியா, சஞ்சய் உபாத்யாயா, சட்டசபை, மேல்சபை தலைவர்கள் அசோக், சலவாதி நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பங்கேற்றனர்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூட்டத்தில், அனைவரின் கருத்துகளையும், தேர்தல் பொறுப்பாளர் ராம் மாதவ் கேட்டறிந்தார்.

கடந்த 2023 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தலில், பெங்களூரு மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

இங்குள்ள மக்கள் எப் போதும் ஆதரவாக இருப்பது, பா.ஜ.,வுக்கு பிளஸ் பாயிண்ட். காங்கிரஸ் அரசின் பிரசாரம், வாக்குறுதி திட்டங்களை தாண்டி, பா.ஜ., வெற்றி பெற்றது.

எனவே, அந்த வெற்றி ஜி.பி.ஏ., தேர்தலிலும் தொடர வேண்டும் என, நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின், 16 சட்டசபை தொகுதிகள், மூன்று லோக்சபா தொகுதிகள் பா.ஜ., வசம் உள்ளன. மற்ற தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு சாதகமான அலைகளை உருவாக்கி, ஜி.பி.ஏ., தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்.

தேர்தலுக்கு தயாராக வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு தலைவர்கள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us