ஒரு வாரமாக இழுத்தடித்த நிலையில் பல்லாரியில் பா.ஜ., கூட்டத்திற்கு அனுமதி
ஒரு வாரமாக இழுத்தடித்த நிலையில் பல்லாரியில் பா.ஜ., கூட்டத்திற்கு அனுமதி
ADDED : செப் 08, 2026 10:05 PM
பல்லாரி: காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து, 'பல்லாரி சலோ' என்ற பெயரில் பாதயாத்திரையை, கடந்த 1ம் தேதி ராய்ச்சூரில் பா.ஜ., தலைவர்கள் துவக்கினர். நேற்றுடன், 8 நாள் பாதயாத்திரை நிறைவு பெற்றது.
இன்று, 9வது நாள் பாதயாத்திரைக்கு பின், நாளைபல்லாரி நகருக்குள் பேரணியாக வரும் பா.ஜ., தலைவர்கள், அரசின் தோல்விகளை கண்டித்து, பிரமாண்ட பொதுகூட்டம் நடத்தவும் உள்ளனர்.
இந்நிலையில், பல்லாரி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுாரியில் பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ., தரப்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், கலெக்டர் நாகேந்திர பிரசாத் அனுமதி கொடுக்கவில்லை.
இதற்கிடையே, பள்ளி, கல்லுாரிகளுக்கு சொந்தமான இடங்களில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட முந்தைய உத்தரவை மேற்கொள் காட்டி, பா.ஜ., பொதுக்கூட்டம் நடத்த, பள்ளி கல்வித்துறை நேற்று அனுமதி மறுத்தது.
இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, முதல்வர் சிவகுமார் கவனத்திற்கு, கலெக்டர் நாகேந்திர பிரசாத் கொண்டு சென்றார். 'ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் போராட்டம், பொது கூட்டம் நடத்தலாம். பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ.,வுக்கு அனுமதி கொடுங்கள்' என, முதல்வர் அறிவுறுத்தினார்.
இதை, தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த, பா.ஜ.,வுக்கு, கலெக்டர் நாகேந்திர பிரசாத், நேற்று அனுமதி வழங்கினார்.
