தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பா.ஜ., – எம்.எல்.ஏ., சந்திரப்பாவிடம் வாக்குவாதம்: வாலிபரால் பரபரப்பு

பா.ஜ., – எம்.எல்.ஏ., சந்திரப்பாவிடம் வாக்குவாதம்: வாலிபரால் பரபரப்பு

பா.ஜ., – எம்.எல்.ஏ., சந்திரப்பாவிடம் வாக்குவாதம்: வாலிபரால் பரபரப்பு


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: பொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில், ‘பணம் வாங்கிட்டு தானே எனக்கு ஓட்டு போட்டீங்க’ என, பா.ஜ., – எம்.எல்.ஏ., சந்திரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம், ஹொலல்கெரே தாலுகா, கோகுண் டே கிராமத்தில் நடந்த சாலை பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், ஹொலல்கெரே தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., சந்திரப்பா பங்கேற்றார்.

கிராமத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்திலிருந்த வாலிபர், கிராமத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாக, சந்திரப்பாவிடம் கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரப்பா, ‘நீங்கள் என்னிடம் பணம் வாங்கி விட்டு தானே எனக்கு ஓட்டு போட்டீங்க. பணம் வாங்காமல் எனக்கு ஓட்டு போடவில்லையே...’ என்றார்.

அதற்கு வாலிபர், ‘நாங்கள் ஒன்றும் உங்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்கவில்லை. நீங்கள் தான், எங்கள் வீடுகளுக்கு வந்து பணம் கொடுத்தீர்கள்’ என்றார். இது, சலசலப்பை ஏற்படுத்தியது.

பின், அந்த வாலிபரை போலீசார் அங்கிருந்து இழுத்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சந்திரப்பா பேசியதாவது:

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்கு வராதவன் நானல்ல. தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ.,வும் நானல்ல. நான் கோகுண்டே கிராமத்திற்கு பலமுறை வந்துள்ளேன்.

ஹொலகெரே தொகுதியில் மட்டும், 493 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும், 20 முறை சென்றுள்ளேன். ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கம் தலைவைத்து படுக்காத எம்.எல்.ஏ., நான் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us