ரவுடி பிறந்த நாளில் பங்கேற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்
ரவுடி பிறந்த நாளில் பங்கேற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்
ADDED : ஜூலை 14, 2026 04:06 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத். இவர், 'கிங் மேக்கர்' தாஸ் என்பவரின் பிறந்த நாளில் பங்கேற்று, கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், தாசுக்கு மாலை அணிவித்தது; ஆளுயர மாலையுடன் விஸ்வநாத் இருக்கும் படங்கள், வீடியோக்களை, தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.
தாஸ் மீது சிக்கஜாலா, எலஹங்கா, நெலமங்களா, தாசரஹள்ளி உட்பட பல போலீஸ் நிலையங்களில் நில அபகரிப்பு உட்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த ஆண்டும் இவரது பிறந்த நாளில் பங்கேற்ற இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட ் ' செய்யப்பட்டார். தற்போது எம்.எல்.ஏ., ஒருவர், அவரின் பிறந்த நாளில் பங்கேற்றது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் படங்கள், வீடியோக்கள் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
