தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/லால்பாக் நடைபயிற்சி சங்கத்தினருக்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா நன்றி

லால்பாக் நடைபயிற்சி சங்கத்தினருக்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா நன்றி

லால்பாக் நடைபயிற்சி சங்கத்தினருக்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா நன்றி


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லால்பாக் பூங்கா வழியாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்ட நிலையில், லால்பாக் நடைபயிற்சி சங்கத்தினருக்கு, பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு வரை சுரங்கப்பாதை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக லால்பாக் பூங்காவும் பாதை அமைக்கும் திட்டம் இருந்தது.

அந்த வழியாக பாதை வந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அரசுக்கு எதிராக பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா போராட்டத்தை கையில் எடுத்தார்.

லால்பாக் பூங்காவில் நடைபயிற்சி செல்வோர், அங்கு வரும் பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டி கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

பரவலான எதிர்ப்பு கிளம்பியதால், லால்பாக் பூங்கா வழியாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டதாக, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று காலையில், லால்பாக் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட தேஜஸ்வி சூர்யா, அங்கு நடைபயிற்சி வருவோரை சந்தித்து நன்றி கூறினார்.

அவர்களுடன் கலந்துரையாடிய போது அவர் பேசியதாவது:

லால்பாக் பூங்கா காய்கறி தோட்டம்.

ஆனாலும், இங்கு மக்கள் விருப்பத்திற்கு எதிராக சுரங்கப்பாதை அமைக்க அரசு முன்வந்தது. இதை நீங்கள் எல்லாம் எதிர்த்ததால் தான், திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கி உள்ளது.

லால்பாக், பெங்களூரு வரலாற்றின் ஒரு பகுதி. 2037ல் பெங்களூரின் வயது 500 ஆண்டுகள் ஆகிவிடும். ஏரிகள், போக்குவரத்து, வாழ்க்கை முறை குறித்து விவாதிக்க வேண்டும்.

ஜப்பான் பாணியில் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.

இப்போது முதல்வரும் அதையே கூறியுள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us