ADDED : ஜூலை 29, 2026 11:46 PM

ராம்நகர்: முதல்வர் சிவகுமாரின் சொந்த தொகுதியில், பா.ஜ., குழுவினர் வறட்சி நிலையை ஆய்வு செய்து, விரைவில் வறட்சி நிவாரணம் அறிவிக்கும்படி, அரசை வலியுறுத்தினர்.
கர்நாடகாவில், இம்முறை எதிர்பார்த்த அளவில், மழை பெய்யவில்லை. அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில், நாற்று நட்டுள்ள விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அணைகளிலும் தண்ணீர் இல்லை. வறட்சி நிலவுகிறது. ஆனால் மாநில அரசு வறட்சியை ஆய்வு செய்யவில்லை. நிவாரண பணிகளையும் துவக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதற்கிடையே, வறட்சியை ஆய்வு செய்வதில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. பல்வேறு தாலுகாக்களில் ஆய்வு செய்துள்ளனர்.
முதல் வர் சிவகுமாரின் தொகுதியான கனகபுராவில், நேற்று ஆய்வு செய்தனர். மேல்சபை எதிர்க்கட்சி த லைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில் தலைவர்கள், மல்லேகவுடனஹள்ளி, சாசலாபுரா கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர். ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பை தெரிந்து கொண்டனர். நீரின்றி வாடியுள்ள பயிர்களை கண்டனர்.
விவசாயிகளுக்கு தைரியமூட்டிய பா.ஜ., குழுவினர், விரைந்து நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசி டம் அறிவுறுத்தினர்.
