/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அரசை பாராட்டுவேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி
/
காங்., அரசை பாராட்டுவேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி
காங்., அரசை பாராட்டுவேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி
காங்., அரசை பாராட்டுவேன் பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி
ADDED : செப் 03, 2025 09:56 AM

உத்தர கன்னடா : ''நான் இப்போது சுதந்திர பறவை; அரசு நல்லது செய்தால் பாராட்டுவேன்,'' என, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் தெரிவித்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். நான் இப்போது சுதந்திர பறவையாக உள்ளேன். அரசு நல்லது செய்தால் பாராட்டுவேன்.
தேசிய திருவிழாவான மைசூரு தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதில் என்ன தவறு உள்ளது. இதற்கு முன்னர், நிசார் அகமது துவக்கவில்லையா? கடவுளை தரிசிக்கும் போது, ஜாதி, மதம் பார்க்கக்கூடாது.
நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்தபோது பெருமையாக இல்லையா? கன்னட மொழி, புக்கர் பரிசை பெற்றுள்ளது. கன்னடத்துக்கு அங்கீகாரம் கிடைக்க காரணமான பானுவை அவமரியாதை செய்வது சரியல்ல.
மாவட்டத்தில் விவசாயிகளின் அரவணைப்பாக கே.டி.சி., எனும் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. 1.12 லட்சம் விவசாயிகளுக்கு, 1,700 கோடி ரூபாய் கடன் வங்கி உள்ளது. நான் நிரந்தரமானவன் அல்ல; ஆனால் இந்த வங்கி நிலைத்திருக்க வேண்டும்.
தர்மஸ்தலாவின் மஞ்சுநாதர் மற்றும் அன்னப்ப சுவாமியின் அதிருப்திக்கு ஆளானால், யாரும் தப்பிக்க முடியாது. தர்மஸ்தலா வழக்கில் 30 சதவீத உண்மை மட்டுமே வெளிவந்துள்ளது; இன்னும் வர உள்ளது. இது வெளிவர தாமதமாகலாம். தர்மஸ்தலாவுக்கு உலகின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் உள்ளனர். இந்த விசாரணை முடியும் வரை யதார்த்தம் புரியாது. குற்றஞ்சாட்டிய கிரிஷ் மட்டன்னவர், மகேஷ் திம்மரோடி ஆகியோர் எங்கிருந்தனர்? அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.