/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் இடைக்கால அறிக்கை சட்டசபையில் அரசுக்கு பா.ஜ., நெருக்கடி
/
தர்மஸ்தலா வழக்கில் இடைக்கால அறிக்கை சட்டசபையில் அரசுக்கு பா.ஜ., நெருக்கடி
தர்மஸ்தலா வழக்கில் இடைக்கால அறிக்கை சட்டசபையில் அரசுக்கு பா.ஜ., நெருக்கடி
தர்மஸ்தலா வழக்கில் இடைக்கால அறிக்கை சட்டசபையில் அரசுக்கு பா.ஜ., நெருக்கடி
ADDED : ஆக 13, 2025 04:33 AM

பெங்களூரு: தர்மஸ்தலாவில் பெண்களை பலாத்காரம் செய்து, புதைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, சட்டசபையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி, பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.
சட்டசபையில் பூஜ்ய வேளையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - சுனில்குமார்: தர்மஸ்தலாவில் பலர் மர்மமான முறையில் இறந்து, புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க, அரசு, எஸ்.ஐ.டி., அமைத்திருப்பதை வரவேற்கிறோம். இதில் கருத்து, வேறுபாடு எதுவும் இல்லை.
அவமதிப்பு ஆனால் விசாரணையின் அடிப்படையில், ஹிந்து கோவில்களை அவமதிக்கும் செயல், சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. சமூக வலைதளங்களை பார்க்கும் போதும், சிலரது விமர்சனங்களை பார்க்கும்போதும், தர்மஸ்தலா மீது நாங்கள் வைத்துள்ள மதிப்பு மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில், அந்த மர்ம நபர், 5, 6 இடங்களை அடையாளப்படுத்தினார். தற்போது, 16 இடங்களை அடையாளப்படுத்தியும், அவற்றை தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.
எஸ்.ஐ.டி., விசாரணை, எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை. இன்னும் சிலர், சில இடங்களை அடையாளம் காண்பித்துக் கொண்டே இருந்தால், அனைத்தையும் தோண்ட முடியாது.
நம்பிக்கை அந்த வகையில், ஆன்மிக தலங்கள் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காக்கும் வகையிலும், தர்மஸ்தலா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் வகையிலும், அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வே ண்டும். எனவே, எஸ்.ஐ.டி., விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்பதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இன்னும் எத்தனை இடங்களில் தோண்டுவீர்கள், எத்தனை எலும் புகூடுகள் கிடைத்துள்ளன என்பதை விளக்க வேண்டும்.
சபாநாயகர் காதர்: போதும், அமைச்சர் பதில் அளிப்பார்.
அமைச்சர் பரமேஸ்வர்: மிகவும் முக்கியமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அரசுக்கு வந்த புகார்கள் மற்றும் அப்பகுதி மக்களின் விருப்பப்படி, ஜூலை 17ல் எஸ்.ஐ.டி., அமைத்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிய வேண்டும். நுாற்றுக்கணக்கான பள்ளங்களை தோண்ட முடியாது. ஒரு கட்டம் வந்த பின், தோண்டுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். அதன் பின், பதில் அளிக்கப்படும். (இந்த வேளையில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது)
பா.ஜ., - சுரேஷ்குமார்: தட்சிண கன்னடா போலீசாரே விசாரணை நடத்த தகுதியானவர்கள், சில வலதுசாரிகள் வலியுறுத்ததால், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது' என, மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியிருந்தார்.
சபாநாயகர்: பூஜ்ய வேளையில் பேச முடியாது. நான் மீண்டும் வாய்ப்பு வழங்குகிறேன்.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: நாங்கள் யாருக்கும் ஆதரவாக இல்லை. எந்த வலதுசாரியும் இல்லை; இடது சாரியும் இல்லை. அனைவரும் எங்களுக்கு வேண்டும். உண்மை வெளிவர வேண்டும் அவ்வளவு தான். நீதிக்கு ஆதரவாக இருக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: இன்று கேள்வி நேரம் முடிந்த பின், உள்துறை அமைச்சர் பதில் அளிக்கட்டும்.
பரமேஸ்வர்: எஸ்.ஐ.டி., விசாரணை முடியும் வரை பதில் அளிக்க முடியாது.
இந்த வேளையில், மீண்டும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுனில்குமார்: கடந்த 12 நாட்களாக தோண்டப்பட்ட பள்ளங்களில் என்ன கிடைத்தது என்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யட்டும்.
சுரேஷ்குமார்: புகார்தாரரான மர்ம நபர், எட்டு மணி நேரம், எஸ்.ஐ.டி.,யிடம் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதன் பின், எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.