sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோத குடிநீர் இணைப்பை கண்டுபிடிக்க 'புளூ போர்ஸ்' படை

சட்டவிரோத குடிநீர் இணைப்பை கண்டுபிடிக்க 'புளூ போர்ஸ்' படை

சட்டவிரோத குடிநீர் இணைப்பை கண்டுபிடிக்க 'புளூ போர்ஸ்' படை


ADDED : ஜூன் 02, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 01:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: காவிரி நீரை திருடுவது, சட்டவிரோதமாக கழிவு நீரையும், மழை நீரையும் குடிநீர் வாரியத்தின் குழாய்களில் விடுவோரை கண்டுபிடிக்க, 'புளூ போர்ஸ்' என்ற பெயரில் படை அமைக்க, பெங்களூரு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

காவிரி ஐந்தாவது கட்டம் உட்பட பல கட்டங்களின் கீழ் பெங்களூருக்கு தினமும் 2,225 எம்.எல்.டி., காவிரி நீரை வழங்குகிறது. 11 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரப்பூர்வ குடிநீர் இணைப்பு உள்ளது.

நஷ்டம்


ஆனால் காவிரி நீரை திருடுவதாலும், கழிவு நீரையும், மழை நீரையும் குடிநீர் வாரிய குழாய்களில் விடுவதாலும், குடிநீர் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

இதை கட்டுப்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம், 'புளூ போர்ஸ்' என்ற பெயரில், படை அமைக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு குடிநீர் வாரியத்தில், 43 துணை பிரிவுகள் உள்ளன. துணை பிரிவு அளவில், தலா ஒரு, 'புளூ போர்ஸ்' அமைக்கப்படும். இந்த படையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட, குடிநீர் வாரியத்தின் ஏழு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

30,000 இணைப்பு


படையினர் நிரந்தரமாக அந்தந்த துணை பிரிவில், ஆய்வு செய்வர். குடிநீரை திருடுவோர், சட்டவிரோதமாக இணைப்பு பெற்றுள்ளவர்கள், மழை நீரை குடிநீர் குழாய்களில் பாய விடுவோரை கண்டுபிடிப்பர்.

ஒவ்வொரு துணை பிரிவிலும், 30,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. கட்டடங்கள் எவ்வளவு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன, எத்தனை கட்டடங்கள் இணைப்பு பெறவில்லை, அந்த கட்டடங்கள் என்ன தண்ணீர் பயன்படுத்துகின்றன, கழிவுநீரை எங்கு பாய விடுகின்றன என்பதை, புளூ போர்ஸ் படையினர் கண்டுபிடிப்பர்.

குடிநீர் வாரியத்தின் குழாய்களில், கழிவுநீரை விடுவது தெரிந்தால், அக்கட்டட உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.

அதிகாரபூர்வமாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ள கட்டடங்களில், பைபாஸ் குழாய் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்வர்.

பெங்களூருக்கு வழங்கப்படும் காவிரி குடிநீரில், 28 சதவீதம் நீர், குடிநீர் வாரிய கணக்கில் வரவில்லை. பழைய குழாய்களில் தண்ணீர் கசிவும் அதிகமாக உள்ளது. தண்ணீர் திருட்டும் அதிகமாகிறது.

இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண, புளூ போர்ஸ் படை உதவியாக இருக்கும். இப்படையினருக்கு ஊதியம், எரிபொருள் செலவு உட்பட, மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் செலவாகும்.

மழை நீரை குடிநீர் வாரியத்தின் குழாய்களில் பாய்ச்சுவதால், மழை பெய்யும் போது, சாக்கடைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுக்கிறது.

சாலையில் துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே மழைநீரை, வாரிய குழாய்களில் பாய்ச்சுவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us