/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காணாமல் போனதாக தேடப்பட்ட ஒப்பந்ததாரர் உடல் கண்டெடுப்பு
/
காணாமல் போனதாக தேடப்பட்ட ஒப்பந்ததாரர் உடல் கண்டெடுப்பு
காணாமல் போனதாக தேடப்பட்ட ஒப்பந்ததாரர் உடல் கண்டெடுப்பு
காணாமல் போனதாக தேடப்பட்ட ஒப்பந்ததாரர் உடல் கண்டெடுப்பு
ADDED : ஏப் 08, 2026 04:39 AM

மாண்டியா: காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒப்பந்ததாரரின் உடல், காவிரி ஆற்றின் கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள ஹுனசனஹள்ளியை சேர்ந்தவர் பவன், 27. ஒப்பந்ததாரர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர், கடந்த, 2ம் தேதி வேலை விஷயமாக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதனால், அவரது பெற்றோர் அச்சம் அடைந்தனர். அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டனர். மொபைல் போன் 'ஸ்விட்ச் ஆப்' என வந்தது.
இதனால், பவனை காணவில்லை என, அவரது பெற்றோர் ஸ்ரீ ரங்கப்பட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடி வந்தனர். அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் பவனின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தது.
கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

