sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 காதலிக்கு திருமண நிச்சயம் 'பாடி பில்டர்' தற்கொலை

/

 காதலிக்கு திருமண நிச்சயம் 'பாடி பில்டர்' தற்கொலை

 காதலிக்கு திருமண நிச்சயம் 'பாடி பில்டர்' தற்கொலை

 காதலிக்கு திருமண நிச்சயம் 'பாடி பில்டர்' தற்கொலை


ADDED : பிப் 09, 2026 04:58 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாலட்சுமி லே - அவுட்: காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதால், பாடிபில்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட்டில் வசித்தவர் கிரண், 26. ஜிம் பயிற்சியாளரான இவர், பாடிபில்டராகவும் இருந்தார். பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று உள்ளார். கிரணும், 28 வயது இளம்பெண்ணும், கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தனர்.

இந்நிலையில் கிரணின் காதலிக்கு, வேறு ஒருவருடன் சமீபத்தில் திருமண நிச்சயம் ஆனது. திருமண பத்திரிகை, திருமணத்திற்காக எடுக்கப்பட்ட சேலையை நேற்று முன்தினம் காலை கிரணிடம், அவரது காதலி காண்பித்து உள்ளார்.

பெற்றோர் விருப்பப்படி வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

மனம் உடைந்த கிரண், தனது தாயிடம் மொபைல் போனில் விஷயத்தை கூறினார். மாலையில் வீட்டிற்கு வந்த அவர், தனது தாயிடம் ஒரு பேப்பரும், பேனாவும் தரும்படி கேட்டார். எதற்காக என்று தாய் கேட்ட போது, நான் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டேன். வரவு, செலவு கணக்கு பார்க்க வேண்டி உள்ளது என்று கிரண் கூறி உள்ளார்.

பேப்பர், பேனாவை வாங்கி கொண்டு தனது அறைக்கு சென்ற அவர், 'எனது தற்கொலைக்கு காதலியும், அவரது தாயும் தான் காரணம்' என்று எழுதினார். தனது மொபைல் போனில் உள்ள தகவல்களை போலீஸ் சேகரிக்கும் வகையில், மொபைல் போன் பாஸ்வேர்டு நம்பரையும் பேப்பரில் எழுதி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிரண் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில், 'கிரணை விட அவர் காதலித்த பெண் 2 வயது மூத்தவர். எட்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு வந்து, திருமணம் செய்து வைக்கும்படி எங்களிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோருக்கு 50 லட்சம் ரூபாய் கடன் இருந்தது.

'காதல், திருமணம் என்ற பெயரில் கிரணை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் வாங்கினார். கடனை அடைத்த பின், வேறு ஒருவரை திருமணம் செய்ய, அந்த பெண் தயாராகி விட்டார். கிரணை தற்கொலைக்கு துாண்டிய காதலி, அவரது தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மஹாலட்சுமி லே - அவுட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us