/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலிவுட் நட்சத்திர தம்பதிக்கு மைசூரு சிற்பியின் விநாயகர் சிலை
/
பாலிவுட் நட்சத்திர தம்பதிக்கு மைசூரு சிற்பியின் விநாயகர் சிலை
பாலிவுட் நட்சத்திர தம்பதிக்கு மைசூரு சிற்பியின் விநாயகர் சிலை
பாலிவுட் நட்சத்திர தம்பதிக்கு மைசூரு சிற்பியின் விநாயகர் சிலை
ADDED : அக் 16, 2025 11:24 PM

மைசூரு: அயோத்தி ராமர் கோவிலுக்கு, ராமர் சிலை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட் குடும்பத்தினருக்கு, அற்புதமான விநாயகர் சிலை செதுக்கிக் கொ டுத்துள்ளார்.
மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ். சிற்பியான இவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு ராமர் சிலையை வடித்துக் கொடுத்தவர். சுவாமி சிலை செதுக்க, பலரும் இவரை நாடுகின்றனர்.
பாலிவுட் நடிகை ஆலியா பட், அவரது கணவரும், நடிகருமான ரன்பிர் கபூருக்கு, விநாயகர் சிலை தேவைப்பட்டது. எனவே சிற்பி அருண் யோகிராஜை மும்பைக்கு வரவழைத்து பேசினர்.
அவரும் ஒப்புக்கொண்டார். ஆறு மாதங்களாக, நான்கு அடி உயர விநாயகர், மூன்று அடி பீடம் உள்ள சிலையை செதுக்கி உள்ளார்.
மும்பை சென்றடைந்த விநாயகர் சிலைக்கு நட்சத்திர தம்பதியர் வீட்டில், பூஜைகள் செய்து, பிரதிஷ்டை செய்யப்படுகிறது.