தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பஞ்சாப் பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

பஞ்சாப் பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

பஞ்சாப் பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நடக்க உள்ள பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் இசை நிகழ்ச்சிக்கு, வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசாஞ்ச். இவர், பெங்களூரு மாதவாராவில் உள்ள நைஸ் மைதானத்தில், வரும் 27ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

இந்நிலையில், ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி அலுவலக கமிஷனரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு நேற்று முன்தினம் வந்த குறுஞ்செய்தியில், தில்ஜித் தோசாஞ்ச் இசை நிகழ்ச்சி நடக்கும் அன்று நைஸ் மைதானம், மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழும்.

குழந்தைகளை இசை நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டாம்; நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஐபோன்கள் சிதறி கிடக்கும்.

அதை யாராவது எடுத்தால் வெடித்து சிதறும் என்று எழுதப்பட்டு இருந்தது. காலிஸ்தானுக்கு ஆதரவாக, முழக்கமும் எழுதப்பட்டு இருந்தது.

இந்த மின்னஞ்சல் செய்தியை, பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு, ஹூப்பள்ளி – தார்வாட் மாநகராட்சி அலுவலகம் நேற்று அனுப்பி வைத்தது.

வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. மின்னஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட ஐ.பி., முகவரியை போலீசார் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us