/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி பெங்களூரில் முன்பதிவு இன்று துவக்கம்
/
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி பெங்களூரில் முன்பதிவு இன்று துவக்கம்
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி பெங்களூரில் முன்பதிவு இன்று துவக்கம்
'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி பெங்களூரில் முன்பதிவு இன்று துவக்கம்
ADDED : செப் 14, 2025 04:20 AM
சிவாஜி நகர்: 'தினமலர்' சார்பில், பெங்களூரில் முதன் முறையாக, 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சி, அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது. இதில் தங்கள் குழந்தைகளை பங்கேற்க விரும்பும் பெற்றோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
நெல் மணியில், குழந்தையின் கையால் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது, விஜயதசமி நன்னாளில் தான். இந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பல்துறை வல்லுனர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின் 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகரின் திம்மையா சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் வளாகத்தில், அக்டோபர் 2ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்க உள்ளது.
நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல் மூன்றரை வயது உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, 'வித்யாரம்பம்' துவக்கலாம். இதற்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.
குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், வயது, முகவரி, 'வாட்ஸாப்' எண் ஆகிய விபரங்களை 77600 51446 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் தெரிவித்து, முன்பதிவு செய்ய வேண்டும்.
பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய தினமலர் சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி இலவசம்.
பெங்களூரில் முதன் முறையாக நடப்பதால், இந்த வாய்ப்பை பெற்றோர் பயன்படுத்திக் கொள்வது அரிய வாய்ப்பு. மேலும் விபரங்களுக்கு 89715 09091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.