/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு வாசிப்பு பழக்கத்தை துாண்டி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பெருமிதம்
/
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு வாசிப்பு பழக்கத்தை துாண்டி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பெருமிதம்
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு வாசிப்பு பழக்கத்தை துாண்டி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பெருமிதம்
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு வாசிப்பு பழக்கத்தை துாண்டி 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பெருமிதம்
ADDED : டிச 06, 2025 05:34 AM

பெங்களூரு: ''ஒரு நல்ல புத்தகம் அடுத்த தலைமுறைகளை இணைக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உடையது. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். தமிழ் புத்தகங்களை படித்தால் மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்; சகிப்பு தன்மை போன்றவற்றை அறியலாம். காவியம், நாவல், குழந்தை, இலக்கியம் என அனைத்து வகையிலான தமிழ் புத்தகங்களை படிக்கும் மணம் எப்போதும் மாறாது,''என வாசிப்பு பழக்கத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் துாண்டி விருப்பம் தெரிவித்தார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் 4வது தமிழ் புத்தக திருவிழா, பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள, 'தி இந் தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்'சில் அமைக்கப் பட்டிருந்த அரங்கை, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன், பெங்களூரு குடிநீர், வடிகா ல் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பள்ளி முத்தமிழ் மன்றத்தின் 'தமிழர் வாழ்வியல் கண்காட்சி'யை துவக்கி வைத்தனர். பின்னர், இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 'இந்தியாவின் ஏவூர்தி மனிதன்' என்ற விருது வழங்கப்பட்டது.
ஏவூர்தி மனிதன் விருது இதை பெற்று கொண்ட அவர் பேசியதாவது:
ஏவூர்தி மனிதன் விருது தந்தது, மனதிற்கு நினைவாக உள்ளது. இந்த விருதை, நம் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கிறேன். புத்தகம் அடுத்த தலைமுறைகளை இணைக்கும். ஒரு நல்ல புத்தகம், ஓர் மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உடையது. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். தமிழ் புத்தகங்களை படித்தால் மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்; சகிப்பு தன்மை போன்றவற்றை அறியலாம். காவியம், நாவல், குழந்தை, இலக்கியம் என அனைத்து வகையிலான தமிழ் புத்தகங்களை படிக்கும் மணம் எப்போதும் மாறாது.
காலம் மாறினாலும் வாசிப்பு பழக்கம் மாறாது. மொபைல் திரைகளிலும் புத்தகங்களை படிக்க முடியும். வாசிப்பை கொண்டாடும் இடமாக புத்தக திருவிழா உள்ளது. பாரதி, பாரதிதாசன் புத்தகங்கள் படிக்கும் போது தேசப்பற்று மலரும். நம் தேசத்திற்கு சுதந்திரம் கிடைக்க, பத்திரிகையாளர்களின் பங்கு இன்றியமையாதது. அப்துல் கலாமின் 'அக்னி சிறகுகள்' புத்தகம் படித்த பின், என் மனதை மாற்றிவிட்டது.
சிந்துாரின் வெற்றி பொருளாதாரத்தில் நம் தேசம் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 1962ல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் துவங்கப்பட்டது. 1963ல் சிறிய அளவிலான ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியது. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு ரஷ்யா நிறைய உதவிகளை செய்தது.
இஸ்ரோ, 1969 ஆகஸ்ட் 15, துவங்கப்பட்டது. அந்த ஆண்டில் தான், நீல் ஆர்ம்ஸ்டிராங், நிலவில் கால் பதித்தார். வல்லரசு நாடுகளுடன் விண்வெளி துறையில் சரிக்கு சமமாக நாம் உள்ளோம். நாம் எதற்கும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், செயற்கை கோள்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக 40 மாடி உயரமுள்ள ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இதில், 80,000 கிலோ அளவுள்ள செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செயற்கை கோள்கள் உருவாக்க, அமெரிக்க பத்து மடங்கு செலவிடுகிறது என்றால், நாம் அதில் ஒரு மடங்கு தான் செலவிடுகிறோம்.
செயற்கை கோள்கள் மூலம் நிலத்தடி நீர், பேரழிவு, இருப்பிடம் அறிதல், விவசாயம் போன்ற பலவற்றை அறிய முடியும். ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிகரமாக முடிந்ததற்கு, நம் தேசத்தின் செயற்கை கோள்களின் பங்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசன் கண் மருத்துவமனை இயக்குநர் சுந்தரமுருகேசன், லெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், திருவனந்தபுரம் தமிழ் சங்க பொது செயலர் வீராணம் சு.முருகன், சென்னை மெட்டெக்ஸ் லேப் நிறுவன மேலாண் இயக்குநர் செல்வகுமார், கண் அறுவை சிகிச்சை வல்லுநர் ஹர்ஷவர்தன், 317 ஏ டிஸ்ட்ரிக்ட் லயன் சங்க கவர்னர் மோகன், கர்நாடக சிறுதொழில் சங்க பொருளாளர் ஆர்.துரை, காரைக்குடி சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவன தலைவர் சேதுகுமணன், பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் மேல்நிலை பள்ளி தாளாளர் மதுசூதனபாபு, ஓய்வு பெற்ற சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் மணிவாசகம், சென்னை பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நம் நாளிதழ் சார்பாக தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் 'மஹாபெரியவா - 2' ஆங்கில நூல்; தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகள் நுால் வழங்கப்பட்டன.

