/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரம்மோத்சவம் சிரசு பவனி
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரம்மோத்சவம் சிரசு பவனி
ADDED : மார் 25, 2026 07:13 AM

தங்கவயல்: தங்கவயல் அருகேயுள்ள பிச்சஹள்ளி கிராமத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு நேற்று அம்மனின், 'சிரச ு ' பவனி நடந்தது.
இக்கோவிலில் பிரசித்தி பெற்ற விழாவாக, பிரம்மோத்சவத்தை கிராம பக்தர்கள் கொண்டாடி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். அம்மனுக்கு படையலிட்டு கிராமமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது.
இன்று, 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு முத்து பல்லக்கு, 26ம் தேதி புஷ்ப பல்லக்கு, 27ம் தேதி கிராம மக்களின் பல்லக்கு, 28ம் தேதி வசந்தோத்சவமும் நடக்கிறது.
தினமும் காலையில் அபிஷேகம், மலர் அலங்காரம், அர்ச்சனைகள், மகா மங்களாரத்தி நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலையில் பக்தி பஜனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பல்லக்கு நகர் வலம் கொண்டு வரப் படுகிறது. பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

