தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மணமகள் ஓட்டம் :மணமகன் தற்கொலை

மணமகள் ஓட்டம் :மணமகன் தற்கொலை

மணமகள் ஓட்டம் :மணமகன் தற்கொலை


UPDATED : அக் 12, 2026 12:00 AM

ADDED : அக் 11, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:00 AM ADDED : அக் 11, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: திருமணத்துக்கு முன், மணமகள் தன் காதலனுடன் ஓடிவிட்டதால், அவமானம் அடைந்த மணமகன் தற்கொலை செய்து கொண்டார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்துாரு தாலுகாவின், சாமலாபுரா கிராமத்தில் வசித்தவர் மஹதேவ பிரசாத், 29. இவருக்கும் மரியாலா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், திருமணம் நிச்சயமாகியது. அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதியன்று, மரியாலா கிராமத்தின் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக இரண்டு குடும்பத்தினரும், தயாராகி வந்தனர்.

ஆனால் அந்த பெண், வேறு ஒருவரை காதலித்துள்ளார். எனவே இரண்டு நாட்களுக்கு முன், காதலனோடு ஊரை விட்டு ஓடிவிட்டார். இதனால் திருமணம் நின்றது. நேற்று முன்தினம், மஹதேவ பிரசாத் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, நியாயம் கேட்டார்.

அவரை பெண்ணின் தாயார் அவமதித்தார். இதனால் மனம் வருந்திய மஹதேவ பிரசாத், நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எலந்துாரு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us