/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலப்பு திருமணம் செய்த தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் கைது
/
கலப்பு திருமணம் செய்த தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் கைது
கலப்பு திருமணம் செய்த தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் கைது
கலப்பு திருமணம் செய்த தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் கைது
ADDED : பிப் 21, 2026 04:24 AM
கொப்பால்: ஓராண்டுக்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்ட தங்கையையும், அவரது கணவரையும், கோடரியால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
கொப்பால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உதய் குமார், மீனாட்சி. வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மீனாட்சியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஓராண்டுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திரு மணம் செய்து கொண்டனர்.
பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். உதய்குமாரின் சகோதரருக்கு, ஹந்த்ரல் அருகேயுள்ள பக்கீரேஸ்வரர் கோவிலில், இலவச திருமணத்திற்கு கடந்த, 18ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால், உதயகுமாரும், மீனாட்சியும் திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னரே கொப்பால் வந்திருந்தனர்.
இதை மீனாட்சியின் மூத்த சகோதரர் மஞ்சுநாத் அறிந்தார். கலப்பு திருமணம் செய்து குடும்பத்தின் கவுரவத்தை சீரழித்து விட்டதாக, தங்கை மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தார்.
தம்பி திருமணத்தன்று கோவில் அருகே உதய்குமாரும், மீனாட்சியும் வந்த போது, அவர்களை மஞ்சுநாத் கோடரியால் தலை, தோள்பட்டை, கையில் வெட்டி விட்டு தப்பியோடினார்.
படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராம் அரசிட்டி கூறுகையில், ''கலப்பு திருமணம் செய்து கொண்டதால், மீனாட்சியையும், அவரது கணவரையும், மஞ்சுநாத் கோடாரியால் வெட்டி உள்ளார்.
''அவரை கைது செய்துள்ளோம். மீனாட்சி நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக, அவரது கணவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை கேட்டுள்ளோம்,'' என்றார்.

