ADDED : அக் 03, 2025 01:33 AM
வர்த்துார்: 'மொபைல் போனில் பொழுது போக்க வேண்டாம்' என, அண்ணன் புத்திமதி கூறியதால், செக்யூரிட்டி கார்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேபாளை சேர்ந்தவர் அம்பரிஷ் தாபா, 18. பிழைப்பு தேடி குடும்பத்துடன் பெங்களூருக்கு வந்தார். வர்த்துாரில் வசித்தனர். தனியார் நிறுவனம் ஒன்றில், செக்யூரிட்டியாக பணியாற்றினார்.
சமீபத்தில் அம்பரிஷ், புதிதாக மொபைல் போன் வாங்கினார். மொபைல் போனை பார்ப்பதிலேயே, அதிக நேரத்தை வீணாக்கினார். பணிக்கும் சரியாக செல்வது இல்லை. இவரது செயலால் வெறுப்படைந்த அவரது அண்ணன், 'மொபைல் போனிலேயே பொழுது போக்க வேண்டாம். ஒழுங்காக பணிக்கு செல்' என, திட்டினார்.
நேற்று மாலையும், இதே காரணத்தால் அண்ணன் திட்டி, புத்திமதி கூறினார். இதனால் மனம் நொந்த அம்பரீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வர்த்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.