/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பட்ஜெட் குறித்து ஆலோசனை சதீஷ் ஜார்கிஹோளி தகவல்
/
பட்ஜெட் குறித்து ஆலோசனை சதீஷ் ஜார்கிஹோளி தகவல்
ADDED : ஜன 03, 2026 07:01 AM
பெங்களூரு: ''வரும் மார்ச் மாதம், கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும். பிப்ரவரியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் துவங்கும்,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பட்ஜெட் தாக்கலுக்கு, மாநில அரசு தயாராகிறது. மார்ச் மாதம், 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பிப்ரவரியில் பட்ஜெட் முன்னேற்பாடு துவங்கும். முதல்வர் சித்தாரமையா துறை வாரியாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பாக்கியுள்ள நிதியுதவி, இம்முறை அந்தந்த துறைக்கு தேவையான திட்டங்கள், துறைகளின் கோரிக்கைகள் குறித்து, முதல்வர் தகவல் கேட்டறிவார்.
தொழிலாளர் சங்கங்கள், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட, அனைவருடனும் கலந்தாலோசித்து, பட்ஜெட் தயாரிக்கப்படும்.
பல்லாரியில் பேனர் கட்டும் விஷயத்தில், கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். கலவரம் நடந்தது ஏன் என்பது, விசாரணைக்கு பின்னரே தெளிவாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

