தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஸ் நடத்துநர்கள் அவமதிப்பு சாலை மறியலில் பெண்கள்

 பஸ் நடத்துநர்கள் அவமதிப்பு சாலை மறியலில் பெண்கள்

 பஸ் நடத்துநர்கள் அவமதிப்பு சாலை மறியலில் பெண்கள்


ADDED : செப் 08, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: ' சக்தி ' திட்டம் செயல்படுத்திய பின், பெண் பயணியரை அரசு போக்குவரத்துக்கழக பஸ் நடத்துநர்கள், அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து, பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கர்நாடக காங்கிரஸ் அரசு, சக்தி திட்டத்தை செயல்படுத்திய பின், அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில், பெண் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆண்கள் பஸ்கள் கிடைக்காமல் பரிதவிப்பதாக புலம்புகின்றனர்.

இதற்கிடையே, பெண் பயணியரை, நடத்துநர்கள் அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பாகல்கோட் மாவட்டத்தின், சிகிகேரி கிராமம் அருகில், ராய்ச்சூர் - பெலகாவி நெடுஞ்சாலையில் பெண்கள், மாணவர்கள் நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

' நாங்கள் ப ஸ்சில் பயணிக்கும் போது, நடத்துநர்கள் எங்களை வீட்டில் வேலை செய்வதை விட்டு, இலவசம் என்பதால் பஸ்சில் ஏன் பயணிக்கிறீர்கள்' என, கேள்வி கேட்டு எங்களை அவமதிக்கின்றனர்' என வருத்தினர்.

அதே போல, பள்ளி, கல்லுாரிகளின் மாணவர்கள் நிற்பதை பார்த்தாலும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களை நிறுத்துவது இல்லை. அலட்சியப்படுத்துவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பெண்கள், மாணவர்களின் போராட்டம் நடந்ததால், நெடுஞ்சாலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த, போக்குவரத்து துறை அதிகாரிகள், பெண்கள், மாணவர்களை சமாதானம் செய்தனர். இனி இது போல நடக்காமல், பார்த்து கொள்வதாக உறுதி அளித்து, சூழ்நிலையை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us