ADDED : செப் 09, 2026 03:49 AM
சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி, வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெருந்துறை ஜெயகுமார் தரப்பில், ''பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளதால் பெருந்துறைக்கு இடைத்தேர்தல் தடையை நீட்டிப்பதில் நியாயம் இல்லை,'' என முறையிடப்பட்டது.
கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தரப்பில், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை, வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கை, இறுதி விசாரணைக்காக வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.
