/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
25 ஆண்டுகளுக்கு பின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைச்சரவை கூட்டம்
/
25 ஆண்டுகளுக்கு பின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைச்சரவை கூட்டம்
25 ஆண்டுகளுக்கு பின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைச்சரவை கூட்டம்
25 ஆண்டுகளுக்கு பின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைச்சரவை கூட்டம்
ADDED : ஏப் 24, 2025 07:12 AM
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம் மலை மஹாதேஸ்வரா மலையில், 25 ஆண்டுகளுக்கு பின், இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு சென்றால், முதல்வர் பதவி பறிபோகும் என்ற மூட நம்பிக்கை இருந்தது. இம்மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர்கள், சாம்ராஜ் நகருக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.
கர்நாடகாவின் நீண்ட கால முதல்வர் என்று பெயர் பெற்ற தேவராஜ் அர்ஸ், 1982ல் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு சென்று வந்த சில மாதங்களிலேயே, பதவியை பறிகொடுத்தார்.
இதேபோன்று 1988ல் ராமகிருஷ்ண ஹெக்டே, 1990ல் வீரேந்திர பாட்டீல் ஆகியோரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்குச் சென்று வந்த பின், அடுத்தடுத்து பதவியை இழந்தனர்.
இதன் பின், 2001ல் அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில், பிலிகிரி ரங்கநாத மலையில், மினி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அன்று முதல் 2013 வரை ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள், சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்குச் செல்வதை தவிர்த்து வந்தனர். ஆனால், 2013ல் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்ற பின், இந்த மூட நம்பிக்கையை ஒழித்தார்.
முதன் முறையாக முதல்வரானபோது சாம்ராஜ் நகர் சென்று வந்தார். ஆனாலும், முழு ஆட்சிக் காலத்தையும் பூர்த்தி செய்தார்.
இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராகி உள்ள சித்தராமையா, சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு ஏற்கனவே சென்றுள்ளார்.
இந்த நிலையில், இம் மாவட்டத்தின் மலைமஹாதேஸ்வராவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.