/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலை மஹாதேஸ்வரா மலையில் கஞ்சா புழக்கம்: பக்தர்கள் வேதனை
/
மலை மஹாதேஸ்வரா மலையில் கஞ்சா புழக்கம்: பக்தர்கள் வேதனை
மலை மஹாதேஸ்வரா மலையில் கஞ்சா புழக்கம்: பக்தர்கள் வேதனை
மலை மஹாதேஸ்வரா மலையில் கஞ்சா புழக்கம்: பக்தர்கள் வேதனை
ADDED : ஜூன் 23, 2025 11:06 PM

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வா மலையில் கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. புனிதமான இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதால், பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் மஹாதேஸ்வரா குடிகொண்டுள்ளார். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இயற்கை எழில் மிகுந்த மலை என்பதால், சுற்றுலா பயணியரும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணியரில் சிலர், கஞ்சா பயன்படுத்துகின்றனர். சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, மலையில் வசிக்கும் கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும், ரகசியமாக போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர்.
மலை மஹாதேஸ்வரா மலை பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள காலியிடம், கஞ்சா புகைக்கும் இடமாக மாறியுள்ளது.
சமீபத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தபோது, இந்த பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மலை மஹாதேஸ்வரா மேம்பாட்டு ஆணைய செயலருக்கு முதல்வர் கண்டிப்புடன் உத்தரவிட்டார். மலையில் கஞ்சா பயன்படுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மலையின் ஆங்காகே மதுபான பவுச்களும் விழுந்து கிடப்பதை காண முடிகிறது. இதனால் பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 'மலை மஹாதேஸ்வரா மலையின் புனிதத்தன்மையை காப்பாற்றுவதில், அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
மலையின் சூழல் அசுத்தமாவதை தடுக்கவில்லை. மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கொண்ட கோவிலை பாதுகாக்க வேண்டும்' என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.